உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ளும்

இலங்கை அணியின் வீரர்களை

ஜனாதிபதி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்

இந்தியாவில் இடம்பெறவிருக்கும் இருபதுக்கு இருபது உலகக்கோப்பை கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை இலங்கைக் கிரிக்கட் அணியினரின் உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்கின்றார்கள். இதைமுன்னிட்டு 'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் வாக்கியம் பொறிக்கப்பட்ட இலட்சினை இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top