மியான்மர் நாட்டின்
ஜனாதிபதியாக
ஆங் சான் சூகியின் நம்பிக்கைக்குரியவரான
ஹிடின் கியா தெரிவு
செய்யப்பட்டார்
மியான்மர் நாட்டின் ஜனாதிபதியாக மியான்மர் நாட்டின் அதிபர் வேட்பாளரான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் நெருங்கிய
நண்பரும், நம்பிக்கைக்குரியவரான ஹிடின் கியா (வயது 69) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 652 எம்.பி.க்கள் கொண்ட இரு சபைகளில் 360 வாக்குகள் ஆங்சான்சூ கட்சிக்கு கிடைத்தது. அக்கட்சியின் ஹிடின் கியா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
ராணுவ பலம் கொண்ட மைன்ட் ஸ்வே 213 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் ஏப்ரல் 1-ம் திகதி பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment