தேவையற்ற விடயங்களை உள்ளடக்கி
உத்தியோகபூர்வ பதவி முத்திரை தவறான செயற்பாடு
கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர்அறிவிப்பு
மாகாண பொதுச் சேவையில் பணியாற்றும் உத்தியோகபூர்வ பதவி முத்திரையினை
பயன்படுத்தக் கூடிய சில அதிகார்கள் அந்த உத்தியோகபூர்வ பதவி முத்திரையினை பயன்படுத்தும்போது அவர்களுக்கு
பொருந்தாத தனிப்பட்ட முத்திரைகளைத் தயார் செய்து அதில் தேவையற்ற விடயங்களை உள்ளடக்கி
உத்தியோகபூர்வ பதவி முத்திரை தயார் செய்யப்படுவது தவறான செயற்பாடாகும் என கிழக்கு மாகாணப்
பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் மகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்
தலைவர்கள் ஆகியோர்களுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர்
மேலும் தெரிவித்திருப்பதாவது,
பதில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பதில் கணக்காளர்கள், பதில்
நிருவாக உத்தியோகத்தர்கள், வேறு பதில் பணிப்பாளர்கள் தமது பெயரினைப் பொறித்து பதில் என்ற சொற்பதத்தினைத் தவிர்த்து வலயக்
கல்விப் பணிப்பளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் என உத்தியோகபூர்வ பதவி முத்திரையினை பயன்படுத்துவது தெரிகிறது.
சிலர் தமக்கு கிடைத்துள்ள வேறு பெயர்கள் மற்றும் கல்வித்தகைமைகளையும்
உத்தியோகபூர்வ பதவி முத்திரையில் சேர்த்துக் கொண்டுள்ளனர். உதாரணமாக சமாதான நீதவான்,
பதவி, பட்டம் தமது சேவை என்பனவற்றையும் உத்தியோகபூர்வ கடிதங்களில் பொறிக்கப்படும் முத்திரையில்
சேர்த்துக் கொண்டுள்ளனர்.
எனவே, முறையற்ற அனாவசிய பதவிகள், தனிப்பட்ட மற்றும் தவறான பதவிகள்
உத்தியோகபூர்வ முத்திரைகளில் காணப்படுமானால் அவற்றை அகற்றி பதில், ,தற்காலிகம் எனின்
அதற்கேற்ப உரிய முறையில் முத்திரையை தயார் செய்து பயன்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாணப்
பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment