இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை!

எதிர்த்து மேன்முறையீடு செய்ய 30 நாள் காலஅவகாசம்


போதைப் பொருளை கடத்திச் சென்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை பெண்ணொருவருடன் மூன்று இந்திய பிரஜைகளுக்கு குவைத் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது என “குவைத் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பெண்ணுடன் இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று இந்தியர்களும் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர்களில் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இவர்களுக்கு எதிராக போதைப் பொருள் விநியோக குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் கைதான  மூன்று இந்தியர்களும் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்கள் விபரம் வருமாறு. பாலக்காடு மலப்புரம் மற்றும் காஸர்கோடு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் முஸ்தப்பா ஷாகுல் ஹமீத் 40 வயது அபுபக்கர் 21வயதுபைஸ்சல் 33வயது அகியோர்கள் ஆவர்  இதை தவிர 41 வயது இலங்கை பெண்ணுக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குவைத்திற்கு போதை பொருள்கள் கடத்தி வந்ததாக போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.


இதில் ஒருவரை கைது செய்த போலீஸ் அவருடைய Mobile-யில் இருந்த தொடர்பு எண்ணை வைத்து மற்ற இரண்டு நபர்களை கைது செய்தனர்.
எனினும், மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய இவர்களுக்கு 30 நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Four get death for drug trafficking in Kuwait

 The Criminal Court has sentenced four people to death – three Indian men and a Sri Lankan woman – for drug trafficking. The three were caught in a case related to heroin smuggling. The court found the four, including three men from Kerala guilty of possessing and selling the narcotic in the country.

A case against them was registered in April 2015 following the bust at Kuwait International Airport. All four sentenced may appeal the verdicts within 30 days and the Appeal Court will review the sentences. Customs caught one of the smugglers at the airport bringing in the heroin. He later gave the names of the other defendants who were arrested in Jleeb Al- Shuyoukh

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top