லிபிய நாட்டு
கடற்கரையில் ஒதுங்கிய
104 அகதிகள் உடல்
:ஆப்பிரிக்காவிலிருந்து
கிரீஸ் நாட்டுக்கு
சுமார் 700 அகதிகள் ஒரு படகில் சென்றனர்.
இந்தப் படகு
க்ரேட் என்ற
தீவு அருகே
சென்றபோது, கடலில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் பலர்
பலியாயினர்.
இந்நிலையில்
இதுவரை 104 அகதிகளின் உடல்கள் லிபிய நாட்டு
கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக லிபிய கடற்படை அதிகாரி
தெரிவித்துள்ளார்.
கிரீஸ்
நாட்டுக்குள் குடியேறும் நோக்கத்தில் சுமார் 700 பேருடன்
வந்த அகதிகள்
படகு எகிப்து
நாட்டை ஒட்டியுள்ள
கிரெட்டே என்ற
கடற்பகுதி வழியாக
வந்தபோது காற்றின்
போக்குக்கு ஈடுகொடுக்க இயலாமல் கடலில் கவிழ்ந்து,
மூழ்கியது.
இதுதொடர்பான
தகவல் அறிந்ததும்,
இரண்டு கடலோர
ரோந்து கப்பல்கள்,
ஒரு ராணுவ
விமானம் மற்றும்
மூன்று ஹெலிகாப்டர்களை
கிரீஸ் அரசு
தேடுதல் பணியில்
ஈடுபடுத்தியது.
விரைந்துவந்த
கடற்படையினர் இதுவரை 302 பேரை உயிருடன் மீட்டனர்.
மேலும் பலரை
தேடும் பணிகள்
முடுக்கி விடப்பட்டுள்ளதாக
உள்ளூர் ஊடகங்கள்
செய்தி வெளியிட்டு
இருந்தன.
இந்நிலையில்,
லிபிய கடற்கரையில்
சுமார் 104 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 75 பெண்கள் மற்றும்
6 குழந்தைகள் அதில் அடங்கும். ஜூவாரா நகரின்
மேற்கு பகுதி
கடற்கரையை ஒட்டி
அவர்கள் கரையில்
மிதந்துள்ளனர்.
இறந்தவர்களிடம்
லைப் ஜாக்கட்
எதுவும் தென்படவில்லை.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்
என்று அஞ்சப்படுகிறது
0 comments:
Post a Comment