43-வது திருமணநாளை கொண்டாடி மகிழ்ந்த
அமிதாப்-ஜெயா பச்சன் தம்பதியர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் தம்பதியர் நேற்று தங்களது 43-வது திருமணநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்திப் படவுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த வேளையில்ஜன்ஜீர்’ (தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த சிரித்து வாழ வேண்டும்) படத்தில் நடித்தபோது அமிதாப் பச்சனுக்கும் அதே படத்தில் அவரது ஜோடியாக நடித்த ஜெயா பாதுரிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 3-6-1973 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த தம்பதியருக்கு திருமணமாகி நேற்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பாக, தனது டுவிட்டர் அபிமானிகளுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள அமிதாப் பச்சன், ‘எனக்கும் ஜெயாவுக்கும் இடையில் மேலும் ஒரு ஆண்டு கடந்துப்போய் உள்ளதுஎன தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான வேளையில் அவர் மும்பையில் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதை சற்று ஏக்கத்துடன் குறிப்பிட்டுள்ள அமிதாப் பச்சன் இருவரும் சேர்ந்திருக்கும் சில பிரத்யேக புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், தங்களது திருமணநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top