கிருஷ்ணகிரியில் லாரி – தனியார் பஸ் – கார் மோதல்:
விபத்தில் பலி 17 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்
இந்தியாவில் கிருஷ்ணகிரி அருகே தனியார் பஸ் மற்றும் கார் மீது, நிலக்கடலை ஏற்றி சென்ற லாரி மோதிய கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
. சுமார் 33 பயணிகளுடன், ஒசூர் மார்க்கத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும், எதிரே வந்த லாரியும் கிருஷ்ணகிரி அடுத்த மேலுமலை என்ற பகுதியில் இன்று, நேருக்கு நேர் மோதியுள்ளது. அதன்பிறகு, பஸ்ஸின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீதும் லாரி மோதியுள்ளது.
இந்த சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி, 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 7 பேர் பெண்கள் என அறிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment