35 குழந்தைகளுக்கு தந்தையான பாகிஸ்தானிய நபர்
100 குழந்தைகள் பெற்றுக்
கொள்வதற்கு
நான்காவது மனைவியை தேடுகின்றார்!
பாகிஸ்தானில் 35
குழந்தைகளுக்கு தந்தையும், மூன்று பெண்களுக்கு கணவருமான ஒருவர், 100 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது குறிக்கோளை அடைய நான்காவது மனைவியை தேடிக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள க்வெட்டாவை சேர்ந்தவர் சர்தார் ஜான் முஹம்மது கில்ஜி(வயது-46), இதுவரை மூன்று திருமணங்கள் செய்து 35 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து வருகிறார்.
100 குழந்தைகள் பெற்றுக் கொள்வதே தனது குறிக்கோளாக வைத்திருக்கும், முஹம்மது கில்ஜி தற்போது அவரது மனைவிகள் மற்றும் குழந்தைகள் ஆதரவுடன் நான்காவது திருமணம் செய்து கொள்ள பெண் தேடி வருகிறார்.
முஹம்மது கில்ஜி கூறுகையில், எனக்கு 26 வயது இருக்கையில் முதல் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே 5 மாத இடைவெளியில் 2 திருமணங்கள் செய்து கொண்டேன். என்னால் முடிந்த அளவுக்கு நிறைய குழந்தைகளை பெறுவது மத கடமை என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
ஆனால் முஹம்மது கில்ஜி-யின் இச்செயலுக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment