நோய் பாதித்த இளம் பெண்ணுக்கு
100வது அறுவை சிகிச்சை
வாழ்நாளில் பெரும்பகுதியை, மருத்துவமனைகளில் கழித்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, 25 வயது பெண்ணுக்கு, அரிய நோயை குணப்படுத்த, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது;
இது, அவருக்கு செய்யப்பட்ட, 100வது அறுவை சிகிச்சை.பாகிஸ்தானின் லாகூர் நகரைச் சேர்ந்த பெண், பெளஸியா யூசுப் (வயது, 25). இவர், சிறு வயதிலேயே, 'பைப்ரோமடோசஸ்' எனப்படும் அரிய வகை வியாதியால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர், உடலில் ஆங்காங்கே, வினோத வடிவங்களில் சதை வளர்ந்து, கோரமாக காட்சி அளிப்பார்.
பைப்ரோமடோசஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெளஸியாவின் இடது முழங்கையில் மட்டும், தொடர்ச்சியாக, 55 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறு வயது முதல், வாழ்நாளில் பெரும்பகுதியை, மருத்துவமனைகளிலேயே, பெளஸியா கழித்து வருகிறார்.
இந்நிலையில்,
100வது முறையாக, லாகூரில் உள்ள மருத்துவமனையில், பெளஸியாவுக்கு நேற்று, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இது குறித்து பெளஸியா கூறுகையில், ''கழுத்து உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, இடது கையை வெட்ட வேண்டுமென, மருத்துவர்கள் கூறினர்; அதற்கு நான் சம்மதிக்கவில்லை; கையை இழந்து, ஊனமுற்றவளாக வாழ எனக்கு விருப்பம் இல்லை,'' என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment