சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல்
சிறையில் அடைக்கப்பட்ட
ராம்குமார் உயிர் மாலை 4.35 மணிக்கு பிரிந்தது
மருத்துவ அறிக்கையில் தகவல்
ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மருத்துவ அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் மாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சமையல் அறையில் இருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராம்குமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின் படி, " ராம்குமாரின் கன்னம் மற்றும் மார்பு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மாலை 4.35 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. காலை 9 மணி முதல் 11 மணி வரை பிரேத பரிசோதனை நடத்தப்படும். உடற்கூறு ஆய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். பிரேத பரிசோதனை அறிக்கையில் ராம்குமார் இறந்ததற்கான விரிவான காரணங்கள் தெரியவரும்.
0 comments:
Post a Comment