துப்பாக்கியால் சுட்டு14 வயது மாணவி தற்கொலை

அமெரிக்க பாடசாலையில் சம்பவம்


அமெரிக்க பாடசாலை ஒன்றில் 16 வய்துடைய சக மாணவி மீது துப்பாக்கி சூடு நடத்திய 14 வயது மாணவி அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
அமெரிக்காவில் உள்ள டெக்காஸ் மாகாணத்தில் அல்பின் நகரில் உயர்நிலைப் பாடசாலை உள்ளது. அந்த பாடசாலைக்கு வந்த14 வயதுடைய மாணவி தான் வைத்திருந்த துப்பாக்கியால்16 வய்துடைய சக மாணவியை சுட்டாள்.

அதில் அவள் காயம் அடைந்தாள். அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவி அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாள். காயம் அடைந்த மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளது உயிருக்கு ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. அதில் மற்றொரு பொலிஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top