வீதி விபத்தில் 16 பேர் பலி



இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலம் பெளத் மாவட்டத்திலிருந்து அதமாலிக் நகரம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் அங்குல் மாவட்டம் தியுலிஜாரி என்ற இடத்தினருகே பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் நான்கு பெண்கள் உட்பட 16 பேர் பலியாகினர். 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்குல் மாவட்ட அரசாங்க அதிபர் அணில் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.


ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்து அவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top