முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாமனிதர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பாக கடந்த 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்முனை நகர மண்டபத்திற்கு முன்னால்  (அமானா வங்கி) இடம்பெற்றமக்கள் நீதிமன்றத்திற்கு முன் முறையீடு”  என்னும் தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் நிகழ்த்திய உரையை மர்ஹும் அஷ்ரஃபின் விசுவாசிகள் பலரும் இன்றும்  நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அக்கூட்டத்தில் என்ன பேசினார்?

தலைவர் அஷ்ரஃபின் மரணத்தின் பின்னணியிலே நடந்த பல விடயங்கள் இன்னும் பகிரங்கமாகச் சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அப்படியான பல விடயங்கள் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் நேரில் வந்தும் எங்களிடம் சொல்கிறார்கள். எழுதியும் தருகிறார்கள். கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது ஒரு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த தலைவருக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கவேண்டும். மறைந்த தலைவரோடு கடைசி மணித்தியாலங்களில் இருந்த பலர் உள்ளனர். பலவிதமான திடுக்கிடும் தகவல்களை அவர்கள் சொல்லுகிறார்கள்.
விசாரணைக்கு முன்வரும்வரை பொறுமையாக  இருந்து இந்த விடயங்களை வெளியிடலாம் என உத்தேசித்திருக்கிறேன்.“ இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசுகையில் சரியாக 15 வருடங்களும் 1 மாதமும் 7 நாட்களுக்கு முன் பெரும் திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் கூறியிருந்தார்.

அன்னாரின் மரணம் சம்பவித்து பதினாறு  ஆண்டுகளாகியும் இன்னும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொறுமையாகவே இருக்கின்றார் என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top