இத்தாலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி
கார்லோ அசுக்லியோ சியாம்பி காலமானார்

இத்தாலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான கார்லோ அசுக்லியோ சியாம்பி(95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(16-09-16) காலமானார்.

1946-ம் ஆண்டில் வங்கி ஊழியராக தனது வாழ்வைத் தொடங்கிய சியாம்பி, இத்தாலியின் 49வது பிரதமராக 1993-1994 வரை பதவி வகித்தார். இத்தாலியின் 1௦வது ஜனாதிபதியாக 1999 முதல் 2006-ம் ஆண்டு வரை பதவி வகித்த இவருக்கு, ஐரோப்பாவின் ஒற்றை நாணய முறையை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்குண்டு. இதுதவிர இத்தாலியின் மத்திய வங்கி கவர்னராகவும், பதவி வகித்திருந்தார்.


இந்நிலையில் சியாம்பி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதனை இத்தாலி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு இத்தாலி பிரதமர் மட்டோ ரென்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top