சவூதி பொலிஸாரால்
தீவிரவாத
தொடர்புடையவர்கள்
17 பேர் கைது.
சவூதியின்
பல்வேறு பகுதிகளில்
இராணுவ மற்றும்
பாதுகாப்பு நிலைகள், பொருளாதார மையங்கள் உள்ளிட்ட
பிரதான தளங்கள்,
முக்கிய புள்ளிகள்
மற்றும் மார்க்க
அறிஞர்கள் பலரை
இலக்கு வைத்து
ஐ. எஸ்.
தீவிரவாதிகள் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த பாரிய
தாக்குதல் திட்டங்கள்
முறியடிக்கப்பட்டுள்ளதாக சவூதி உள்துறை
அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று
திங்கட்கிழமை செய்தியாளர் மாநாட்டில் பேசிய உள்துறை
அமைச்சின் உத்தியோகப்
பூர்வ பேச்சாளர்
மன்சூர் அல்
துர்க்கி, புலனாய்வு
தகவல்களை மையமாக
வைத்து பல்வேறு
மட்டங்களில் பல மாதங்கள் நீடித்த இராணுவ
நடவடிக்கைகள், விசாரணைகள் மூலமே ஐ. எஸ்.
இன் இந்த
பாரிய தாக்குதல்
திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என தெரிவித்தார்.
பொலிஸாரின் சுற்றி
வளைப்பின் போது,
சவூதியில் இயங்கும்
ஐ. எஸ்.
இன் மூன்று
முக்கிய பிரிவுகள்
கண்டரியப்பட்டதுடன் ஒரு பெண்
உட்பட 17 பேர்
கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சவூதி, பாலஸ்தீன், ஏமன், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்
என அல்
துர்க்கி சுட்டிக்
காட்டினார்.
இதன்
போது இவர்களுடன்
ஒட்டும் குண்டுகள்
உட்பட மொத்த
எடை 19 கிலோ
மற்றும் 620 கிராம் கொண்ட அதி சக்தி
வாய்ந்த குண்டுகள்,
7 கிலோ மற்றும்
520 கிராம் மொத்த எடை கொண்ட தற்கொலை
தாக்குதலுக்கு பயன்படுத்தப் படும் வெடிக்கும் பெல்ட்டுகள்,
தானியங்கி ஆயுதங்கள்
மற்றும் துப்பாக்கிகள்,
6 இலட்சம் ரியால்களுக்கும்
அதிகமான பணம்
உள்ளிட்டவையும் கைப்பற்றப் பட்டதுடன், சவுதியில் இடம்பெற்ற
பல்வேறு தாக்குதல்களுடன்
இவர்கள் சம்மந்தப்
பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டதாக அல் துர்க்கி மேலும்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment