ராம்குமார் தற்கொலை செய்த அறையில்
கண்காணிப்பு கேமரா பழுதானது எப்படி?

சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்



ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா செயல்படாமல் இருந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உட்பட 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், கிளைச் சிறைகள் என 138 சிறைகள் உள்ளன. இவற்றில் 22,650 பேரை அடைத்து வைக்க முடியும். கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி தமிழக சிறைகளில் 17,550 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் சிறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறை, புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உட்பட 33 சிறைகளில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய சிறைகளில் கைதிகளின் அறையைத் தவிர பொதுவாகக் கூடும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

இந்த கேமராக்களை பராமரிப் பதற்கு, ஆண்டுக்கு ஒருமுறை சிறைத்துறை .ஜி. அலுவலகத்தில் வைத்து டெண்டர் விடப்படும். டெண்டரில் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனத்தால் கேமராக்கள் பராமரிக்கப் படுகிறது. கண்காணிப்பு கேமராவில் ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தகவல் தருவார்கள். அதிகபட்சம் 3 நாட்களுக்குள் கேமரா பழுது நீக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், சிறை ஆவணக் காப்பகத்துக்கு எடுத்துச் செல்லப்படும். சிறை யில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது, குறிப்பிட்ட நாளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உடனடியாக சிறைத்துறை .ஜி. அலுவலகத்துக்கு அனுப்பி வைக் கப்படும்.

மத்திய சிறை வளாகங்களை பொறுத்த வரை, திறந்த வெளியில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வெளிப்பகுதியில் நடக்கும் நிகழ் வுகள் மட்டுமே கண்காணிக்கப் படுகின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிமனித உரிமை காரணமாக, கைதிகளின் அறையில் கண்காணிப்பு கேமரா வைக்க முடியாது.

சிறைகளின் பிரதான நுழைவாயில், நேர்காணல் அறை, உயர் பாதுகாப்பு பகுதிகள், சமையல் அறை, நூலகம், கைதிகள் கூடும் இடங்கள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு கைதிகளின் நடவடிக்கை கள் கண்காணிக்கப்படுகின்றன.

தமிழக அளவில் 9 மத்திய சிறைகளுக்கும் ஒரு தொழில்நுட்ப ஆய்வாளர் தலைமையில் 10 உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்போது 5 உதவி ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஒருவர் 2, 3 சிறைகளை கூடுதலாக கவனிக்கின்றனர்.

பாதுகாப்பு கருதி சில விசாரணைக் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை தவிர்த்து, காணொலி காட்சி முறையில் ஆஜர்படுத்தும் திட்டம் அமலில் உள்ளது. எனவே, சிறைகளில் பாதுகாப்பு கருதி தொழில் நுட்பப்பிரிவு, காவலர், அதிகாரிகள் காலியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டி ருந்த ராம்குமார், மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அறையில் கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால், அது பழுதாகி இருப் பதால் தற்கொலை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்தக் கேமரா எப்படி பழுதானது? திட்டமிட்டே அது பழுதாக்கப் பட்டதா என்பன போன்ற பல சந்தேகங்களை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top