இன்று ஐ.தே.க 70வது மாநாடு!

களைகட்டியுள்ள கொழும்பு கெம்பல் மைதானம்



ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது மாநாடு இன்று சனிக்கிழமை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டை கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாநாடு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்துகொள்வாரென தெரிய வருகிறது.

.தே. வின் 70 வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதுமிருந்து . தே. ஆதரவாளர்கள் இன்று கொழும்பு கெம்பல் மைதானத்திற்கு வருகை தரவுள்ளனர்.

கட்சி சார்ந்த இளைஞர் அமைப்பு, பெண்கள் அமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இம்மாநாட்டில் பங்கெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள விசேட அதிதிகள் மற்றும் ஆதரவாளர்களின் வருகை காரணமாக இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையில் பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியெங்கும் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதனால் சாரதிகள் மாற்று வழிகளை கையாள வேண்டுமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் மாநாட்டிற்கென திட்டமிட்டு ஆதரவாளர்களை திரட்டும் முயற்சியை . தே. முன்னெடுக்கவில்லை என்றும் வழமைக்கும் மாறாக பெருமளவிலான கூட்டம் கெம்பல் மைதானத்துக்கு வருகை தரும் என்ற நம்பிக்கை கட்சிக்கு இருப்பதாகவும் . தே. பேச்சாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இல்லாதபோது கூட . தே. 50 வது மாநாட்டை வெகு விமர்சையாக முன்னெடுத்திருந்தது.


அந்த வகையில் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் கட்சியின் 70வது மாநாட்டை முன்னொரு போதும் இல்லாத வகையில் வெகு விமர்சையாக நடத்துவதற்கு கட்சி எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top