குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற

பெண்ணின் சிறுநீரகங்கள் மாயம்!

குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் தனது சிறுநீரகங்களை இழந்த நிலையில் இலங்கை வந்துள்ளார்.

குவைத்தில் பணி புரிந்த சந்தர்ப்பத்தில் திடீர் நோய் வாய்ப்பட்ட குறித்த பெண் 3 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் இலங்கை வந்துள்ளார்.

புளத்சிங்கள- மில்லகந்தை ஐம்பதாம் ஏக்கர் என்னும் இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட 41 வயதான இந்தப் பெண் 3 குழந்தைகளின் தாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.


அத்துடன் தனது மனைவிக்கு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top