ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள்
ஊடுருவிய சிறுவனுக்கு
புலமைப்பரிசில்
குற்றவியல்
சட்டத்தின் பிரகாரம் சைபர் குற்றங்களுக்கு தண்டனை
வழங்க புதிய
சட்டம் கொண்டு
வரவுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ள அதேவேளை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக கூறப்பட்டு
கைதுசெய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவன் கல்வியில் சிறந்து விளங்கும் ஒருவர் என்பதால்
அவருக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சிறிகொத்தவில்
இன்று இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் சைபர் குற்றங்களுக்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வரவுள்ளது.
மேலும்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தில் பாதுகாப்பு குறைவுள்ளதை
தான் ஏற்றுக்
கொள்வதாகவும் அமைச்சர் ஹரின் இதன்போது கூறியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும்,
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்
ஊடுருவியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள
17 வயது சிறுவன்
கல்வியில் சிறந்து
விளங்கும் ஒருவர்
என்பதால் அவருக்கு
புலமைப் பரிசில்
வழங்குவது குறித்து
ஆலோசித்து வருவதாகவும்
அவர் கூறியுள்ளார்.
மஹிந்த
ராஜபக்ஸவின்
ஆட்சிக் காலத்தில்
இவ்வாறு இடம்பெற்றிருப்பின்
வௌ்ளை வேன்
வந்திருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், ஆனால்
நாம் அந்த
மாணவனுக்கு புலமைப் பரிசில் வழங்குவது குறித்து
அவதானம் செலுத்தியுள்ளோம்
எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment