மாவடிப்பள்ளியில் திறக்கவிருந்த நூலகத்திற்கு பூட்டு

வைக்கோல் கந்தில் படுக்கும் மிருகத்தின் செயல் எனத் தெரிவிப்பு


மாவடிப்பள்ளியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறக்கப்படவிருந்த மாவடிப்பள்ளி நூலகம் சிலரின் அநாகரிகமான நடவடிக்கைகளால் திறக்கப்படாமல் தடுக்கப்பட்டதாக அந்த ஊர் மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பல கட்சிகளின் அரசியல்லவாதிகள் உட்பட பலரிடமும் அந்த ஊர் மக்கள் முறையீடுசெய்திருந்தும் எவரும் உதவ முன்வராத நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைச் சந்தித்து இது தொடர்பில் கூறிய போது அவரது சொந்த நிதியிலிருந்த 6 இலட்சம் ரூபாவை நூலத்தின் அபிவிருத்திக்கு வழங்கினார். அதனைக் கொண்டு நூலகத்துக்கு தேவையானவற்றைக் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நூலகத்தை திறப்பது தொடர்பில் காரைதீவு பிரதேச சபையின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அதன் போது அவர் இது தொடர்பான நிலைமைகளை விளக்கினார். கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை பிரதேச செயலகத்தில் ஒப்படைத்து பிரதேச சபையின் மூலம் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார் என்று அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாசிகசாலை அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் திறக்கப்படவிருந்த நிலையில் அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வாசிகசாலை கிழக்கு மாகாண சபையின் கீழ் வருவதால் அதனை கிழக்கு மாகாண முதலமைச்சரே திறக்க வேண்டுமென்றும் வேறு எவருக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் காரைதீவு பிரதேச சபையின் செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த வாசிகசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பொது அறிவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது பொது நூல் நிலையம் இது பல்லாயிரம் மக்கள் வாழும் மாவடிப்பள்ளி கிராமத்தில் இல்லாத காரணத்தால் அதற்குரிய கட்டிடம் கட்டப்பட்டது ஆனால் அதற்குரிய வசதிகள் இல்லாத காரணத்தால் வாசிக சாலைகயை முழுமையாக இயக்க முடியாத நிலையில் காணப்பட்ட போது முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்களின் உதவியால் ஒரூ இலட்சம் ரூபாய்க்குரிய நூல்களை பெற முடிந்தது ஆனால் அதன் முக்கிய பாவளை தளபாடங்கள் இல்லாத குறைகள் காணப்பட்டன அதை மாவடிப்பள்ளி மக்களின்  கூடுதல் ஆதரவை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளிடம் சுட்டி காட்டியும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றும் முன்னேறிவரும்  இந்த கிராமத்துக்கு முதல் அமைச்சர் மற்றும் பல முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகள் பலர் வந்துள்ளனார் ஆனால், அவர்களில் எவரும் மாவடிப்பள்ளி நூலகத்தின் அவல நிலையை கவனத்தில் கொள்ளாததால் மனம் நொந்த அம்மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன்அவர்களிடம் கூறிய போது அதற்குரிய சகல வசதிகளையும் நிறைவு செய்து கொடுத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவர் செய்தாலும் மக்கள் சேவையாக அமையட்டும் என்ற சிந்தனை அற்ற சில  முஸ்லிம் அரசியல்வாதிகள் எமது சமூகத்தின் மத்தியில் இருந்து கொண்டு செய்வதுமில்லை செய்பவனை விடுவதுமில்லை என்ற நிலையில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றார்களே என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top