ராம்குமார்
பிரேத பரிசோதனைக்கு அனுமதி
சிறையில்
தற்கொலை செய்து
கொண்டதாகக் கூறப்படும் ராம்குமார் உடல்
பிரேத பரிசோதனைக்கு
சென்னை ஐகோர்ட்
அனுமதி வழங்கியுள்ளது.
ராம்குமார் உடலை ,
3 பேர் டாக்டர் குழுவுடன், ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவும் பிரேத பரிசோதனை செய்யலாம் என ஐகோர்ட் கூறியுள்ளது.
சுவாதி
கொலையில் கைது
செய்யப்பட்ட ராம்குமார், நேற்று மாலை, சென்னை
புழல் சிறையில்
மின்வயரை கடித்து
தற்கொலை செய்து
கொண்டார். அவரது
உடல் ராயப்பேட்டை
அரசு மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல்
பிரேத பரிசோதனை
நடைபெற இருந்தது.
இந்நிலையில்,
அவரது உடல்
பிரேத பரிசோதனையை
நிறுத்தி வைக்க
வேண்டும் எனக்கூறி
அவரது வழக்கறிஞர்
சென்னை ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தார்.
ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே
பிரேத பரிசோதனையை
நிறுத்தி வைக்க
வேண்டும். பிரேத
பரிசோதனையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த
வேண்டும். பிரேத
பரிசோதனையின் போது, ராம்குமார் தரப்பு மருத்துவரையும்
அனுமதிக்க வேண்டும்
எனக்கூறப்பட்டிருந்தது.
இந்த
வழக்கை விசாரித்த
நீதிபதி, ராம்குமார்
உடல் பிரேத
பரிசோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும்,
ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை
நடத்த உத்தரவிட
வேண்டும் என்ற
மனு மீதான
விசாரணையை மதியத்திற்கு
நீதிபதி ஒத்திவைத்தார்.
மதியம்
மீண்டும் வழக்கு
விசாரணைக்கு வந்த போது, ராம்குமார் உடலை
, 3 பேர் டாக்டர்
குழுவுடன், ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவும் பிரேத
பரிசோதனை செய்யலாம்
என ஐகோர்ட்
கூறியுள்ளது.
இதனிடையே,
புழல் சிறையில்
ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக
மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில்,
ராம்குமார் மரணம் தொடர்பாக அறிக்கை அளிக்க
தேசிய மனித
உரிமைகள் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரத்தில்
விசாரணை நடத்தி
அறிக்கை அளிக்க
ஏ.டி.ஜி.பி.,க்கு மனித
உரிமை ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment