கூரை மேல் ஏறி எதிர்ப்பை வெளிப்படுத்திய
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊழியர்கள்
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மையில் உள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் நிறுவனத்தின் ஊழியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களில் மூவர் கூரையின் மீது ஏறி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
5 வருடங்களுக்கு மேலாக இந்த லேக் ஹவுஸில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எந்த விதமான சம்பள உயர்வுகளும் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த நிலைமை இவ்வாறிருக்க நேற்று முன்தினம் வேலைக்கு வந்த புது ஊழியர்களுக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படுவதாகவும்
சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதை எதிர்த்தும் தமக்கு தரவேண்டிய சம்பள உயர்வை தரக்கோரியுமே தாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment