அமைச்சர் றிஷாதை பற்றி கதைப்பதற்கு
தவத்திற்கு என்ன அருகதை உள்ளது?


மாகாண சபை உறுப்பினர் தவம் 01.09.2016ம் திகதி வியாழக் கிழமை மாவடிப்பள்ளி நூலகத்தில் இடம்பெற்ற அசாதாரண நிலமையொன்றை தனது வங்குரோத்து அரசியலுக்கு சாதகமாக்கிக்கொள்ள முனைகின்றார்.
கடந்த 07.09.2016ம் திகதி புதன் கிழமை இதனைக் கண்டித்து ஒரு ஊடகவியாளர் மாநாட்டையும் ஏற்பாடு செய்திருந்தார்.தவத்திடம் சமூக விடயங்களுக்கும் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தவனாக எனது இவ் அறிக்கையை ஆரம்பிக்கின்றேன்.
இங்கு நான் ஒரு விடயத்தை அழுத்தமாக முன் வைக்க விரும்புகிறேன்.நாங்கள் அங்கு திறப்பு விழாவிற்கு செல்லவில்லை.பொருட்களை கையளிக்கவே சென்றோம்.இதற்கு காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அனுமதியளித்திருந்தார்.இதற்கான ஆதாரங்கள் எங்களிடமுள்ளன.தவத்திற்கு தேவை என்றால் அவற்றை கையளிக்கவும் தயாராகவே உள்ளோம்.சேவை செய்ய வந்த அமைச்சர் றிஷாதை மு.காவினர் தடுத்ததால் மக்கள் உணர்ச்சிவசப்பட்டதன் விளைவு தான் குறித்த சம்பவத்தின் பின்னணி என்பதை அழுத்தமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
அமைச்சர் றிஷாதை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தவம் கோரிக்கை விடுத்துள்ளார்.முதலில் தவத்தை மு.காவிலிருந்து நீக்க வேண்டும்.மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் மரணித்த தினத்தின் வெடில் கொழுத்திய தவம் மு.காவில் இருப்பதற்கு எந்த தகுதியுமற்றவர்.அமைச்சர் ஹக்கீம் நோன்பு திறக்க அக்கரைப்பற்று வந்த போது கஞ்சிப் பானையினுள் மண்ணை அள்ளிப் போட்டது மாத்திரமல்லாது நோன்பாளிகளை நடு வீதியில் நோன்பு திறக்கச் செய்த ஈனச் செயலைச் செய்த தவம் இதனை அநாகரிகம் என ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டுவது வேடிக்கையாகவுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு பிறகு கூட மஹிந்தவிடமிருந்து பிரிய மனமில்லாது மக்களால் உந்தப்பட்டு வந்த மு.காவிற்கு அமைச்சரையில் இருக்க என்ன தகுதி உள்ளது? இதன் போது மஹிந்தவை ஆதரித்து குரல் கொடுத்தவரில் தவத்தின் நாமும் ஊடகங்களில் உலாவித் திருந்தது.நல்லாட்சி மூலம் முதலமைச்சரை பெற்ற மு.கா மைத்திரி வாக்களிக்காதவரை கிழக்கிற்கு முதலமைச்சராக நியமித்துள்ளது.இதனை விடக் கேவலம் என்னதான் உள்ளது.
கௌரவ மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களே!
நாகரீகத்தை முதலில் மு.காவிற்கு படித்து கொடுங்கள்.அதனை படித்து கொடுக்க நீங்கள் முதலில் தகுதியானவரா என்பதையும் சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.
தவம் மாவடிப்பள்ளி நூலகத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயை மாத்திரம் ஒதுக்கி பெயர் பலகையில் தனது நாமத்தை பொறிக்க கோரிய போது ஐந்து இலட்சத்திற்கு மேல் தந்தால் மாத்திரமே அதற்கு அனுமதிப்போமென மக்களால் தவத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இழி வரலாறுகளை நான் நியாபகப்படுத்த விரும்பவில்லை.தவம் ஊடகவியாளர் மாநாட்டில் குறித்த சம்பவமன்று ஐந்து இலட்சம் பெறுமதியான பொருட்களை சேதமாக்கியதாக கூறியுள்ளார்.இதனை தவம் வஹி மூலமா அறிந்து கொண்டார்? பொலிசில் கூட பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களே சேதமாக்கியதாக உள்ளது.பொய் சொல்லி கட்சியை வளர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளீர்கள் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகின்றது.அமைச்சர் றிஷாத் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உங்களிடமிருந்தால் அதனை நீதி மன்றம் சென்று உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தலாமே? தயக்கமேன்? உங்கள் கட்சித் தலைவர் கோடி வாங்கித் தான் மைத்திரியை ஆதரித்ததாக கதை செல்கிறதே! இது உண்மையா? வடக்கு,கிழக்கு இணைப்பிற்கும் பணம் பறிமாறப்பட்டுவிட்டதாமே! இதுவும் உண்மையா?
கௌரவ மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களே!
உங்கள் தலைவர் பிச்சை எடுத்தாவது மாவடிப் பள்ளியை கட்டித் தருவேன் எனக் கூறிய விடயத்திற்கு கூட எங்கள் தேசியத் தலைவரே உதவி செய்திருந்தார்.நீங்கள் நடாத்திய நடமாடும் சேவைக்கு மாவடிப்பள்ளி எனும் சிறிய ஊரில் உள்ள இந் நூலகத்தில் வேலை செய்த பெண்ணை அழைத்து செல்லத் தான் வேண்டுமா? அவர் தவிர்ந்து வேறு ஊழியர்கள் இல்லையா? உங்கள் அரசியல் விளையாட்டை மாவடிப்பள்ளி மக்கள் நன்கே அறிவர்.மாவடிப்பள்ளி மக்களை வாக்களிக்கும் இயந்திரமாக கருதும் உங்களை பாலமுனை மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமை துரத்தியது போன்று துரத்தும் காட்சியை நீங்கள் வருகை தரும் நாளன்று கண்ணுறுவீர்கள்.இப்போது வரிந்து கட்டிக் கொண்டு மாவடிப்பள்ளி நூலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறீர்களே! இத்தனை நாளும் அது மூடப்பட்டு கிடந்த போது விண்ணில் வீடு கட்டியா வசித்து வந்தீர்கள்? குறித்த தினம் நூலகத்தை பூட்டியமைக்கு உங்கள் மு.காவினரின் சித்து விளையாட்டே காரணம்.இதற்கு நூறு வீதம் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் எங்கள் கைகளில் உள்ளன.ஊடக மாநாடிற்கு போகும் நீங்கள் முடிந்தால் இது பற்றி எங்களுடன் விவாதிக்க ஒரு தடவையாவது வாருங்கள் பார்க்கலாம்.
அல்-ஹாபிழ் A. A. M அஸாம்
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top