ராம்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்
வழக்கறிஞர் ராம்ராஜ்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் பொலிஸார் கைது செய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புழல் சிறையின் சமையல் அறைக்கு வெளியில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்தும், மின் வயரை உடலிலும் செலுத்தி தற்கொலைக்கு முயன்ற ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடலை பார்க்க வந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நேற்று காலை 11.30 மணி முதல் 1 மணிவரை ராம்குமாரை அவர் சந்தித்து. ராம்குமாரின் பாதுகாப்பு குறித்து கேட்டபோது தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் நேற்று சிறை காவலர் விஜயகுமார் என்பவர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளதால், திட்டமிட்டு ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும். இந்த கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் வரை சென்று நீதிக்காக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment