கொலை குற்றம்சாட்டப்படுள்ள
ராம்குமாரை
பொலிஸ் கொன்று விட்டது
சமூக ஊடகங்களில் தகவல்
சுவாதி
கொலை வழக்கில்
பொய் குற்றம்சாட்டப்படுள்ள
ராம்குமாரை பொலிஸே திட்டமிட்டு கொலை
செய்து விட்டதாக
பிரான்ஸ் தமிழச்சி
தனது முகநூல்
பக்கத்தில் (பேஸ்புக்கில்) பதிவிட்டுள்ளார்.
சென்னை
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த
மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல்
வெட்டிக் கொலை
செய்யப்பட்டார்.
இதொடர்பாக
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள
டி.மீனாட்சிபுரத்தைச்
சேர்ந்த ராம்குமாரை
ஜூலை 1-இல்
பொலிஸார் கைதுசெய்து சென்னையில் புழல்
சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று
தற்கொலை செய்து
கொண்டார்.
இந்நிலையில்,
பிரான்ஸில் வசித்து வருவதாக
கூறப்படும் புதுச்சேரியை சேர்ந்தவர் தமிழச்சி, தனது
முகநூல் பக்கத்தில்,
'சிறையில் ராம்குமாரை
காவல்துறை கொலை
செய்துள்ளது' என்ற தலைப்பில் சில கருத்துக்களை
வெளியிட்டுள்ளார்.
அதில்,
சுவாதி கொலை
வழக்கில் பொய்
குற்றம் சாட்டப்பட்ட
ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு
சிறையில் தற்கொலை
செய்து கொண்டார்
என்று காவல்துறை
தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது சிறையில்
காவல்துறை நடத்திய
திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு
விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற
தகவல் காவல்துறையினருக்கு
கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர்
படையைச் சேர்ந்த
150 ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை
முன்கூட்டியே கிடைத்ததால் அதன் ஆபத்தை உணர்ந்து
கொண்டு காவல்துறை
ராம்குமாரை கொன்றுவிட்டது. ராம்குமார்
வெளியே வந்தால்
காவல்துறையினர்தான் தன் கழுத்தை
அறுத்தது என்கிற
உண்மையை அறிவித்துவிடுவான்
என்ற பதற்றமே
காவல்துறை சாகடிக்க
காரணமாகவும் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment