பிரபாகரனின் அடையாள அட்டையை
நினைவுப் பொருளாக வைத்திருக்கும்
மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையைத் தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்ற 53 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
“பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் நாம்
அங்கிருந்து விலகி விட்டோம்.அந்த இடத்தில் இருந்து நான் ஒரு நினைவுப் பொருளை எடுத்துக்
கொண்டேன். பிரபாகரனின் அடையாள அட்டையே அது. அதனை நான் இன்னமும் வைத்திருக்கிறேன். வருங்காலத்தில்
அதனை இராணுவ அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பேன் என்று நம்புகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment