தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு
ஒட்டகம் அறுக்கமுடியாது

வசதிகள் ஏற்படுத்த கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி


ஒட்டகம் அறுக்க உரிய வசதிகளை செய்து தர தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று  தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல்மகாதேவன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது இதில்,"தீவிர விசாரணைக்கு பிறகுதான் ஒட்டகம் அறுக்க அனுமதிக்க முடியாது என ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டது என்று தலைமை நீதிபதி தெரிவுத்தார்
ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் குழு அளிக்கும் பரிந்துரைகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஒட்டகம் அறுக்க  உரிய வசதிகள் இல்லாத இடங்களில் அறுக்க  அனுமதிக்க முடியாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. அதன்படி வகுக்கப்பட்டுள்ள விதிமுறைமுறைகளை ஆராய்ந்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தலைமை நீதிபதி அமர்வு விளக்கம் அளித்தது.
.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top