காலி பியதியகம
பிரதேசத்தில்
போலி கச்சேரி
கண்டுபிடிப்பு!
காலி
பியதியகம பிரதேசத்தில்
இரண்டு மாடிக்
கட்டடம் ஒன்றில்
இயங்கி வந்த
போலி கச்சேரி
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலி
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
இந்த கச்சேரி
சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது
சந்தேக நபர்கள்
இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த
கச்சேரியில் இருந்து தேசிய அடையாள அட்டைகள்,காணி உறுதிகள்,சாரதி அனுமதிப்பத்திரங்கள்,பாடசாலை சான்றிதழ்கள்,
கிராம உத்தியோகத்தர்
சான்றிதழ்கள் மற்றும் பிரதேச செயலக சான்றிதழ்களும்
,உத்தியோகப்பூர்வ இறப்பர் முத்திரைகள் 150 போன்றவை மீட்கப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் காலி
நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment