கொடூர கொலையாளிகளுடன் துமிந்த சில்வா!
வெலிக்கடை சிறைக்குள் பதற்றம்
பாரத
லக்ஷ்மன் பிரேமசந்திர
கொலை தொடர்பாக
மரண தண்டனை
விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த
சில்வா விசேட
பாதுகாப்பின் கீழ் வெலிக்கடை சிறைச்சாலையில் சீ-3
அறையில் தங்க
வைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தெமடகொட
சமிந்த உட்பட
ஏனைய குற்றவாளிகள்
நான்கு பேரும்
அந்த அறையில்
தனி தனியாக
தடுத்து வைக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை
சிறைச்சாலையின் சீ-3 சிறையில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தடுத்து வைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
தற்போது வரையில்
கிட்டத்தட்ட 40 குற்றவாளிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக
சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வெலே
சுதா உட்பட
பிரதான தரப்பின்
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பிற கொடூரமான
குற்றச் செயல்களில்
ஈடுபட்ட குற்றவாளிகளும்
அந்த அறையிலேயே
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உடல்
தேவைகளுக்காக கழிப்பறைகள், குளியலறைகள் அந்த சிறைச்சாலையில்
உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த
அறை கட்டடத்தில்
தனித்தனியாக செல்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான
செல்களில் சிறைக்கைதிகள்
மூவர் தடுத்து
வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான
குற்றங்களின் குற்றவாளிகள் தனியான அறைகளில் தடுத்து
வைக்கப்படுகின்ற நிலையில் துமிந்த சில்வாவும் அவ்வாறு
தனி அறையில்
தடுத்து வைப்பதற்கு
சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மரண
தண்டனை விதிக்கப்பட்ட
கைதிகள் ஒரு
நாளைக்கு 30 நிமிடம் உடற்பயிற்சிகளுக்காக
சிறைச்சாலையில் வெளியே அழைத்து வரப்படுவார்கள்.
மரண
தண்டனை விதிக்கப்பட்ட
குற்றவாளிகளை பார்வையிடுவதற்காக வாரத்திற்கு
ஒரு முறை
சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை
மரணதண்டனைக் கைதிகளான துமிந்தவும்,அவரது நண்பரையும்
வேறு சிறைச்சாலைக்கு
மாற்றுவது தொடர்பில்
இன்று தீர்மானிக்கப்படும்
என சிறைச்சாலைகள்
ஊடகப் பேச்சாளரும்,
ஆணையாளருமான துசார உபுல்தெனிய சிங்கள ஊடகம்
ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment