முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக
மன்சூர் ஏ. காதர்
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ. காதர் என்பவரை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்படிஆணைக்குழுவின்உத்தியோகபூர்வ http://www.slelections.gov.lk/web/index.php/ta/recognized-political-parties
இணையத்தளத்தினூடாக, இதனை அறிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 63 உள்ளன என்றும், அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.
இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மு.காங்கிரஸின் உயர் பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ. காதர், அந்தக் கட்சியின் செயலாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள்ஆணைக்குழுவின்இணையத்தளத்தை பார்வையிட:
0 comments:
Post a Comment