மஹிந்தவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கையின் இடி அமீனே ராஜபக்ஸ நாட்டை விட்டு ஓடு ஓடு!

மஹிந்த ராஜபக்ஸ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்று பலத்த எதிர்ப்பாக மலேசிய தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்ரா உலக மையத்தில் நடைபெறும் ஆசிய - பசுபிக் வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டுக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிற்கு தலைமையேற்று மஹிந்த மலேசியா சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று மஹிந்தவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மலேசிய தமிழர்கள், இன்று அவர் புத்ரா உலக மாநாட்டு மையத்தில் உள்ளார் என்ற தகவல் மலேசிய தமிழர்கள் மத்தியில் பரவியதையடுத்து மலேசியத் தமிழர்கள் குறித்த கட்டடத்தை முற்றுகையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன் காரணமாக மண்டபத்தை சுற்றி பாதுகாப்பு நிமித்தம் மலேசிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளைஇலங்கையின் இடி அமீனே” ”ராஜபக்ஸ  மலேசியாவை விட்டு ஓடு ஓடுஎன்ற பதாகைகளை ஏந்தியவாறு, ஆக்ரோசமான கோஷங்களையும் மலேசியத் தமிழர்கள் எழுப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top