கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமான்
கொலை தொடர்பில் அனைத்து சந்தேகநபர்களும் கைது!
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட்
சகீப் சுலைமானை கடத்திக் கொலை செய்தமை தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் வேளையில் ஒருவரும் காலை வேளையில் ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
ஏற்கனவே நேற்று கைதுசெய்யப்பட்ட 2 பேர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர்.
இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு
11.30 மணியளவில், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து,
இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டே படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம், ஹெம்மாத்தகம
பிரதேசத்திலிருந்து, 24 ஆம் திகதி புதன்கிழமை (24) இரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment