நீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது
தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடிகுறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீர் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக மூன்று அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து குடிநீர் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்திருந்தது.

3 வருடங்களுக்கு ஒரு தடவை நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த நான்கு வருடங்களாக நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  அந்தச் சபை சுட்டிக்காட்டியிருந்தது.

புதிய முறைக்கு அமைவாக குறைந்த கட்டணமாக 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. சமூர்த்தி பயனாளிகளுக்கு குறித்த விலைக்கு 15,000 லீற்றர் நீர் பெற்றுக்கொடுக்கப்படும்.

பாடசாலை, விகாரை மற்றும் ஆலய பூமிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த கட்டண அதிகரிப்பு யோசனையை அமைச்சரவை, இன்று செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தியுள்ளது.


.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top