டிரம்ப் பதவி ஏற்பு விழாவின் போது
போர்க்களமாக மாறிய அமெரிக்கா

217 பேர் கைது: 6 பொலிஸார் காயம்!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழாவின் போது வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் அண்டிய பகுதிகள் போர்களமாக மாறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையின்போது 217 பேர் கைது செய்யப்பட்டதாகவும் 6 பொலிஸார் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது. பல இடங்களில் சேதங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். இவர் தெரிவு செய்யப்பட்டது அமெரிக்க மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள், அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் ஆவதற்கு ரஷ்யா உதவி செய்துள்ளது மற்றும் வாக்கு எண்ணிக்கை மோசடி என பல குற்றங்கள் சுமத்தப்பட்டன.
தற்போது இவற்றை எல்லாம் மீறி அமெரிக்காவின் ஜனாதிபதியாக வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அமெரிக்க மக்கள் சிலர் டிரம்ப் ஜனாதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் போரட்டக்காரர்கள் அங்கிருந்த பொலிஸார் வாகனங்கள் மற்றும் கதவு ஜன்னல்களில் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி போரட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் ஒரு சில அங்கு இருந்த பொலிஸார் மீது பட்டதால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதாகவும் அதில் இருந்த சுமார் 100 பேர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

போராட்டம் வன்முறையாக மாறியதால் பொலிஸார் பெப்பர் ஸ்பெரே வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்துள்ளனர். அது மட்டுமின்றி இப்போராட்டத்திற்கு காரணமான சுமார் 217 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top