45வது அமெரிக்க ஜனாதிபதியாக

டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டனர்.  இதில் கடந்த நவம்பர் 8-ந் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, டொனால்டு டிரம்ப் (வயது 70) வெற்றி பெற்றார்.
தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர். டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
விழாவில் வெள்ளை மாளிகை வந்த டெனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவியை, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர்.
வெள்ளை மாளிகை வளாகத்தில் நேற்று தொடங்கிய விழாவில் ஜனாதிபதியாக டெனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதியாக பென்ஸி ஆகியோர் பதவியேற்றனர். முன்னதாக விழா மேடையில் விழா தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அமெரிக்க மக்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அமெரிக்காவில் 45 வது ஜனாதிபதியாக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.

இந்த விழாவில் சர்வதேச நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top