மல்கம்பிட்டி பள்ளிவாசலின்
அபிவிருத்தி பணிகள் விரைவில்
நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஹாரிஸ்
(கியாஸ்
ஏ. புஹாரி)
சம்மாந்துறை
நம்பிக்கையாளர் சபையின் நீண்டகால பராமரிப்பின் கீழுள்ள
சம்மாந்துறை, மல்கம்பிட்டி, கொண்டவட்டுவான்
பள்ளிவாசலின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவில்
ஆரம்பிக்ப்படவுள்ளதாக
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எம்.எச்.எம்.
ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மல்கம்பிட்டி
பள்ளிவாசல் அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக
அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர்
மேலும் தெரிவித்துள்ளதாவது,
எமது
ஊரில் பழமை
வாய்ந்து பலரும்
விரும்பத்தக்கதான சிறந்த சூழலில் காணப்படும் மல்கம்பிட்டி
பள்ளிவாசல் நீண்ட காலமாக எந்தவொரு அபிவிருத்திப்
பணிகளும் செய்யப்படாமலிருப்பதனால்
இம்முறை புதிதாக
தெரிவுசெய்யப்பட்ட நம்பிக்கையாளர் சபை
நிர்வாகமானது இப் பள்ளி வாசலினை சிறப்பான முறையில் அபிவிருத்தி
செய்து பராமரிக்க
திட்டமிட்டுள்ளது.
இதன்
முதற்கட்டமாக கடந்த 2017.01.12 ஆம் திகதி மல்கம்பிட்டி
பள்ளி வாசலின்
சிரமதானப் பணியினையும்
நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். அத்தோடு தற்போது டெங்கு
பெருகும் அபாயம்
எமதூரில் காணப்படுவதால்
சுகாதார வைத்திய
அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க நம்பிக்கையாளர்
சபையின் பராமரிப்பின்
கீழுள்ள அனைத்துப்
பள்ளிவாயல்களிலும் சிரமதானப் பணிகளும்
இடம்பெற்று வருகின்றன.
மேலும்
இனிவரும் காலங்களில்
எமது ஊர்
அரசியல் தலைமைகளிடமும்,
ஏனைய தனவந்தர்களிடமும்,
சமூக அமைப்புக்களுடனும்
பேசி இப்
பள்ளிவாசல் உட்பட சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின்
கீழ் பராமரிக்கப்படும்
அனைத்துப் பள்ளிவாசல்களையும்
அழகுபடுத்தியமைப்பதற்கும் தீர்மாணித்துள்ளோம் - என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார் .
0 comments:
Post a Comment