லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் பாடசாலைக்கு
தளபாடங்கள் அன்பளிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை
கல்வி வலய
சாய்ந்தமருது கோட்டத்தில் அமைந்துள்ள லீடர் எம்.எச்.எம்.
அஷ்ரப் வித்தியாலயம்
தரம் 9 வரை
தரம் உயர்த்தப்பட்ட
பாடசாலையாகும்.
இங்கு
வருடாவருடம் மாணவர்களின் அனுமதி அதிகரித்துவரும்நிலையில் தளபாடங்களுக்கான தட்டுப்பாடும்
ஏற்பட்டநிலையில் உள்ளது.
அந்த
அடிப்படையில் இவ்வருடம் தரம் 1ற்கு 60 மாணவர்கள்
புதிதாக அனுமதிபெற்றுள்ள
நிலையில் அவர்களுக்கான
தளபாடப் பற்றாக்குறையை
நிவர்த்திக்கும்முகமாக சாய்ந்தமருது மழ்ஹரியன்
2000 சமூக சேவை
அமைப்பினர் தாமாக முன்வந்து சுமார் ஒரு
இலட்சம் ரூபா
பெறுமதியான இரும்பு மேசைகள் மற்றும் பிளாஸ்டிக்
கதிரைகள் போன்ற
தளபாடங்களை அவ்வமைப்பின் குழு சார்பாக அமைப்பின்
வெளிநாடுகளுக்கான தொடர்புச் செயலாளரும் கல்முனை அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியருமான
எப். முகம்மட்
அஸ்லமினால் பாடசாலைக்கு
அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இவ்வுதவியில்
பங்கேற்ற அவ்வமைப்பின்
உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு உறுப்பினர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்
மற்றும் பெற்றோர்கள்
நன்றிகளை தெரிவித்துத்துக்
கொள்கின்றனர்.
கல்முனை
அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் வைத்தியர் எப். முஹம்மட் அஸ்லம் அவர்கள் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம்.ஏ.நிஸார் அவர்களிடம்
சம்பிரதாயபூர்வமாக தளபாடங்களில்
ஒரு சிலவற்றை வழங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment