உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில்
முதலிடம் பிடித்தவர்கள்

இன்று வெளியாகிய 2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்தவர்கள் வருமாறு:

வர்த்தக பிரிவில் நாடளாவிய ரீதியாக
முதலாம் இடம்
அகலங்க ராஜ பக்ஸ ( கொழும்பு ஆனந்த வித்தியாலயம்)
இரண்டாம் இடம்
விந்துல பெரேரா (புனித ஜோசப் வித்தியாலயம்)
மூன்றாவது இடம்
நிபுனி ரூபசிங்க (ஹிங்குராக்கொட ஆனந்த மகளீர் கல்லூரி)
.

அதேவேளை, உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரொஸானி அக்தார் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடத்தை கல்முனை பாஃத்திமா வித்தியாலயத்தைச் சேர்ந்த கெலரின் டீலுஜன் என்ற மாணவர் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியா முதலாம் இடத்தை மாத்தறை ராஹுல வித்தியாலயத்தின் ஆர்.ஜி.நிசல் புன்சர பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது இடத்தை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.ரொஸான் அக்தாரும், மூன்றாவது நிலையை கல்முனை கார்மேல் பாத்திமா வித்தியாலயத்தின் ஜே.கிலெரின் தில்ஸானும் அடைந்துள்ளனர்.

பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலாம் இடத்தை குருணாகலை மலியதேவ மகளிர் பாடசாலையின் கே.டி.எம்.அமாயா பெற்றார்.

இரண்டாவது இடத்தை காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தின் யூ.ஜி.சத்துர ஜயசிங்க மற்றும் மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியின் எம்.பி.சவிந்து திமால் தானுக என்பவர் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கலைப்பிரிவு முதலாம் இடத்தை கண்டி மகளீர் உயர் பாடசாலையின் இந்தீவரி கவரம்மன பெற்றுள்ளார்.

அந்த பிரிவில் இரண்டாம் இடத்தை மானிப்பாய் இந்து கல்லூரியின் பீ.குருபரேஸன் பெற்றுக்கொண்டுள்ளார்.

மூன்றாம் இடத்தை கிரிபத்கொடை விஹாரமகாதேவி பாடசாலையின் .பாரமி என்ற மாணவி பெற்றுள்ளார்.

இதுதவிர, உயர்தர பொறியியல் பிரிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன் ஜே.கனகசுந்தரம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை மாத்தளை விஞ்ஞான கல்லூரியைச் சேர்ந்த நிஸல் கொப்பேகடுவை அடைந்துள்ளார்.

அந்தபிரிவில் மூன்றாம் இடத்தை கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த .ரனதுங்க என்பவர் பெற்றுள்ளார்.

உயிரியல் கட்டமைப்பு விஞ்ஞான பிரிவுவில் கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயத்தின் மலிதி சஸிகலா நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேவேளை, அந்த பிரிவில் இரண்டாம் நிலையை கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தின் மயுமி தத்சரணி அடைந்துள்ளார்.

மூன்றாம் இடத்தை ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்யாஸ் பாதிமா ஆரோஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொது பாடநெறிகளின் ஊடாக நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை கொழும்பு மியுஸியஸ் வித்தியாலயத்தின் திலார ஏக்கநாயக்; பெற்றுள்ளார்.

பொது பாடநெறி பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு தோற்றிய தும்மோதர, பெல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்ஜய விமுக்தி கருணாரத்வும்.

காலி, உலுவிட்டிகே பிரதேசத்தைச் சேர்ந்த லஹிரு சசங்க ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்தவர்கள்

2016ஆம் ஆண்டுக்கான .பொ. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய யாழ்ப்பாணம் - சுன்னாகம் - ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன், கனகசுந்தரம் சதுர்ஸஜான் முதலிடம் பெற்றுள்ளார்.

வவுனியா மாவட்டம்

உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவு மற்றும் கணிதப்பிரிவில் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி முதலிடத்திடம் பெற்றுள்ளதாக கல்வித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை மாவட்டம்

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவில் மாத்தறை - ரஹூல கல்லூரியின் மாணவன் ஆர்.ஜெ.நிஷல் புன்சிறி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் ஆனந்த கல்லூரியின் மாணவன் முதித அகலங்க முதலாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை விஞ்ஞானப்பிரிவில் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இம்முறை மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும் பத்மகைலைநாதன் டிலூஜன் 3 தர சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இது போன்று ஏனைய மூன்று பிரிவுகளிலும் (கலை, வர்த்தகம், கணிதம்) இம்முறை 3 தரச்சித்திகளை பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .

நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா கோல்புறுக் பாடசாலை மாணவி கலைப்பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி 3 தர சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top