ஹசலக நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு
அமைச்சர் ஹக்கீம் முன்வைத்த யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
ஹசலக
நீர்வழங்கல் திட்டத்தின் ஊடாக 33 கிராம சேவையாளர்
பிரிவுகளை உள்ளடக்கும்
வகையில் 12,500 புதிய நீர் இணைப்புக்கள் பெற்றுக்
கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால்
சுமார் 49,370 பயனாளிகளுக்கு நன்மைக் கிடைக்கின்றது. பொருளாதார
முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழு மற்றும்
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல்
கொள்முதல் குழுவின்
விதப்புரையின் அடிப்படையில் ஹசலக நீர் வழங்கல்
திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் நகரதிட்டமிடல் மற்றும்
நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment