.பொ. உயர்தர பரீட்சை 

பெறுபேறுகள் வெளியாகியன...!



2016ஆம் ஆண்டுக்கான .பொ. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கை பரீட்கைள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான .பொ. உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2016ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டல் கையேடும், .பொ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுடன் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் கையேட்டை பயன்படுத்தி மாணவர்கள் தமக்கு விருப்பமான பாடவிதானங்களை தெரிவு செய்ய முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா கூறியுள்ளார்.


பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் .பொ. உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு உதவும் வகையில், 300 விசேட ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top