140 எழுத்துக்களுக்கு பதிலாக டுவிட்டரில்
280 எழுத்துக்களை பதிவு
- சோதனை முன்னோட்டம்
சோதனை முன்னோட்டமாக டுவிட்டரில் இனி 140 எழுத்துக்களுக்கு பதிலாக 280 எழுத்துக்களை பதிவு செய்யலாம் என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்து உள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டர் மிகப்பெரிய ஊடகமாக இருக்கிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் தங்களது கருத்துக்களை இதில் பதிவிடுகிறார்கள்.
டுவிட்டரில் இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தை பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது.
இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி சோதனை முன்னோட்டமாக 140 எழுத்துக்களுக்கு பதிலாக 280 எழுத்துக்கள் வரை பதிவிடலாம் என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அதன் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி கூறும்போது, இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் வரவேற்பை பெறும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களை பதிவிடுவோர் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்புவோருக்கு 140 முதல் 160 எழுத்துக்கள் என்பது பெரிய பிரச்சினையாக இருந்தது.
இதனால் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்து சோதனை அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் மேலும் எழுத்துக்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
0 comments:
Post a Comment