மட்டக்களப்பு
மாவட்டத்தின் சல்லித்தீவில்
ரம்மியமான ஓய்வுப் பிரதேசம் திறப்பு
மட்டக்களப்பு
மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச
செயலகப்பிரிவின் சல்லித் தீவிலுள்ள இயற்கை பல்வகைப்
பாதுகாப்புடனான ரம்மியமான ஓய்வுப்பிரதேசம் மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர்
திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திறக்கப்பட்டது.
25 மில்லியன்
ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஓய்வு
பிரதேசம் நேற்று
கோரளைப்பற்று பிரதேச சபையுடன் அரசாங்க அதிபரால்
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு
பிரதேச சபைச்
செயலாளர் எஸ்.இந்திரகுமாரிடம் கையளிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை
அபிவிருத்திக் கருத்திட்டம் 2017இன் கீழ் சுற்றுலா
அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்
அமைச்சின் நிதி
ஒதுக்கீட்டில் மத்திய கட்டடங்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப
ஆலோசனையுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டது.
குளியலறை,
சமையலறை வசதியுடன்
கூடிய இரண்டு
தொகுதிகளாக 4 அறைகளையுடைய கைபிரிற் வீட்டுத் தொகுதிகள்
அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 8 பேர்
தங்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சல்லித்தீவினைச்
சுற்றிய பிரதேசத்தில்
சூரிய மின்கலம்
மூலம் ஒளியூட்டப்பட்டுள்ளதுடன்,
உல்லாசப்பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும்
வகையில் படகுச்சேவையும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
படகுச்சேவையானது
உல்லாசப்பயணிகள் தீவினைச் சுற்றிப் பார்க்கக்கூடியதாக இருக்கும். பறவைகள் தங்கிச் செல்லும்
இயற்கைச்சரணாலயமாக இத் தீவு
விளங்குகிறது. அதே நேரம், வர்ண மீன்கள்,
முருகைக்கற்களால் நிறைந்த மிக ரம்மியமான பகுதியாக
சல்லித் தீவு
காணப்படுகிறது.
சல்லித்தீவின்
வனப்பு பாதிக்கப்படாத
வகையில் இச்
சுற்றுலா செயற்த்திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு
மாவட்ட பிரதம
கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட
செயலக உதவித்திட்டமிடல்
பணிப்பாளர்களன ஏ.சுதர்சன், எஸ.முரளிதரன்,
ஏ. சுதாகரன்,
கோரளைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.இந்திரகுமார், மத்திய
கட்டங்கள் திணைக்கள
பொறியியலாளர்களான வை.கிலக்சன், எம்.டினேசன்
உள்ளிட்ட பிரதேசமக்களும்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.