கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து

சிவனொளிபாதமலையை பார்க்கும் வாய்ப்பு!



தாமரை கோபுரத்தில் இருந்து காலநிலை சீரான நாட்களில் சிவனொளிபாத மலையை கூட பார்வையிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது.

350 மீற்றர் உயரமான இந்த கோபுரம், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு முதன்மை பரிமாற்று கோபுரமாக அமையவுள்ளது.

இந்த கோபுர திறப்பின் மூலம் பெருமளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நிர்மாணிப்பு பணிகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தாமரை கோபுர திட்ட முகாமையாளரான Cai XIaofeng தெரிவித்துள்ளார்.

D.R. விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 இல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்த திட்டத்திற்கு 104 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

50 தொலைக்காட்சி சேவைகள் மற்றும் 35 வானொலி நிலையங்கள் ஆகியவற்றிற்கான சமிக்ஞைகளை இந்த கோபுரத்தின் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.

சீனாவின் எக்ஸ்சிம் வங்கியினால் 104.3 மில்லியன் டொலர் நிதியளிக்கப்பட்ட திட்டம் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத் திட்டத்தின்படி 912 நாட்களுக்குள் இந்த திட்டம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த திட்டம் தொலைத்தொடர்பு கோபுரத்தின் முக்கிய செயல்பாடாக இருந்தாலும், அது பல செயல்பாட்டு கட்டடங்களாக வடிவமைக்கப்படும்.

தாமரை கோபுர தளம் பல்வேறு வர்த்தக மையங்கள், உணவகங்களை கொண்டுள்ளதுடன், அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த கோபுரத்தில் விருந்து அரங்கு உள்ளதுடன், எட்டாவது மாடியில் ஒரு கண்காணிப்பு தளமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top