ரோஹிங்கிய அகதிகளுக்கு

தகுந்த பாதுகாப்பு வழங்குங்கள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  கோரிக்கைக்கு

ஜனாதிபதி துரித நடவடிக்கை



கல்கிஸையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய அகதிகளை இன்று 26 ஆம் திகதி காலை வெளியேற்றி அங்கிருந்த அகதிகளையும் முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்டது தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மிகுந்த கவலையுடன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
விசேட அழைப்பையேற்று இன்று பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் அவரை சந்தித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன், ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார். இதன்போது அங்கு சமூகமளித்திருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அசாத் சாலி ஆகியோரும் இதற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் பேரவையின் அனுசரணையுடன் இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு எதிராக வெளியிலிருந்து வந்த குழுவொன்று அட்டகாசம் புரிந்து வருகிறது. ஒரு சர்வதேச நிறுவனத்தில் பொறுப்பிலிருக்கும் ரோஹிங்கிய அகதிகளுக்கு, அரசு என்ற அடிப்படையில் உதவிசெய்யவேண்டிய கடைமை நமக்கு இருக்கிறது. இதற்கு எதிராக வெளியிலிருந்து செயற்படுகின்ற சக்திகளுக்கு இடமளிக்கவேண்டாம் என்று இவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
உடனே, எஸ்.எஸ்.பி.யை தொடர்புகொண்ட ஜனாதிபதி, அங்குள்ள கலநிலவரங்களை கேட்டறிந்துகொண்டார். வெளியிலிருந்து வந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற யாருக்கும் இடமளிக்கவேண்டாம். அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யுங்கள். நீதிமன்றம் ஊடாக இதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளமுடியுமோ அதை செய்யுங்கள். தேவையான பாதுகாப்பு படையை கொண்டுவந்து பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று கடுமையான தொனியில் உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது
.அத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இப்பிரச்சினை தொடர்பில் அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த அவலைகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடமும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் சாகல ரட்நாயக்கவை இன்று (26.09.2017) காலை அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்கிஸையில் இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமான சம்பவங்களை விபரித்ததுடன், அது தொடர்பிலான காணொளியையும் அவரிடம் காட்டினார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை கடல் வழியாக படகுகளில் சென்றுகொண்டிருந்த மியன்மார் அகதிகளை இலங்கைக் கடற்படை கைதுசெய்து யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸில் ஒப்படைத்ததுபின்னர் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டு .நா அதிகாரிகளின் பராமரிப்பில் கல்கிஸைக்கு கொண்டுவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தஞ்சமடைந்திருந்த  அகதிகளையே இன்று காலை அந்தப் பிரதேசத்திற்கு சென்ற பௌத்த பிக்குகள் அடங்கிய இனவாதிகள் அங்கிருந்து வெளியேற்றினர்சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி அமைதியை பேணவேண்டிய பொலிஸாரும் இதற்கு  உடந்தையாக இருந்தமை, வேதனையானது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகலவிடம் விபரமாகச் சுட்டிக்காட்டினார்.
இனவாதிகள் .நா உயர் அதிகாரிகளையும் அச்சுறுத்தியிருக்கின்றனர்.நாவின் மனித உரிமை சாசனத்தைக்கூட புறக்கணித்து, தான்தோன்றித்தனமாக இனவாதிகள் செயற்பட்டமை, கேவலமானதெனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top