இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்
நடவடிக்கை தொடர்பாக
நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம்!
வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமார் விடயத்தில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக நீதிபதி மா.இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார்.
வித்தியா
படுகொலை செய்யப்பட்ட
வழக்கின் தீர்ப்பு
இன்னும் சற்று
நேரத்தில் வழங்கப்பட்டவுள்ளது.
இந்நிலையில்,
தீர்ப்பாயத்தின் நீதிபதி மா.இளஞ்செழியன் 345 பக்கங்களை
கொண்ட தனது
தனிப்பட்ட தீர்ப்பின்
சுருக்கத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளார்.
அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரனின்
நடவடிக்கை சுவிஸ்குமார்
என்று அழைக்கப்படும்
மகாலிங்கம் சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது
நடவடிக்கை.
பொதுமக்கள்
சுவிஸ்குமாரை கட்டி வைத்து தாக்கிய போது
அங்கு சென்ற
இராஜாங்க அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரன்,
கட்டை அவிழ்த்து
விடுமாறு பொது
மக்களை கோரியுள்ளார்.
அது நல்ல
விடயம்.
ஆனால்,
சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவோ, மேற்கொண்டு நடவடிக்கை
எடுக்கவோ இராஜாங்க
அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரன் நடவடிக்கை
எடுக்கவில்லை. இதனை சந்தேகநபரான மகாலிங்கம் சசிக்குமார்
நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
பொதுமக்களிடம்
சசிக்குமாரை அவிழ்த்து விடுமாறு கூறிய விஜயகலா
மகேஸ்வரன், சசிக்குமாரின் உறவினர்கள் வந்து அவரை
அழைத்துச் செல்லும்
வரை சுமார்
2 மணி நேரம்
இரவு 11 மணியில்
இருந்து 1 மணி
வரை வீதியில்
காத்திருந்துள்ளார்.
இராஜாங்க
அமைச்சரின் இந்த நடவடிக்கை சந்தேகநபராக ம.சசிகுமாரை தப்பிக்க
வைக்கும் முதலாவது
நடவடிக்கை என
நீதிபதி இளங்செழியன்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.