ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்

முன்னாள் பிரதமர்

எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின்

58 ஆவது நினைவு தின நிகழ்வு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 58 ஆவது நினைவு தின நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (26) முற்பகல் ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் இடம்பெற்றது.
அத்துடன் இணைந்ததாக உலகின் முதல் பெண் பிரதமரான காலஞ்சென்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் காலம் சென்ற அநுர பண்டாரநாயக்கவும் நினைவுகூப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் முதலில் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மலர்வளையம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
சர்வமத சமயக் கிரியைகளுடன் இன்று முற்பகல் நினைவுதின நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மல்வத்தைப் பிரிவின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் மற்றும் அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர் ஆகியோரினால் விசேட பௌத்த சமயக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டன.

மகா சங்கத்தினர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top