காரில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி
பத்துக்கும்
மேற்பட்டோர் படுகாயம்
சோமாலியா
நாட்டின் தலைநகரில்
காரில் வெடிகுண்டு
வெடித்த சம்பவத்தில்
ஏழு பேர்
உடல் சிதறி
உயிரிழந்துள்ளனர். மேலும் பத்துக்கும்
மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக அந்நாட்டு பொலிஸார்
தெரிவித்துள்ளனர். சோமாலியா தலைநகரான மோகாடிஷூவில்
நடந்த தாக்குதல்
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்நகரில்
உள்ள பஸ் நிலையம் அருகே
இச்சம்பவம் நடந்துள்ளது. குண்டு வெடித்தபோது அந்த
இடத்தை ஒரு
மினி பஸ் கடந்து சென்றுள்ளது. அந்த
பஸ்ஸில் இருந்தவர்களும் இந்த சம்பவத்தால்
பாதிக்கப்பட்டனர்.
தற்சமயம்
வரை ஏழு
பேர் உயிரிழந்துள்ள
நிலையில், பலர்
காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை
அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
கார்
பயணித்த போது
வெடிக்கச் செய்யப்பட்டதா
அல்லது நிறுத்தி
வைக்கப்பட்ட நிலையில் வெடிக்க செய்யப்பட்டதா என்பது
குறித்து எவ்வித
தகவலும் இல்லை.
தற்சமயம் வரை
இந்த தாக்குதலுக்கு
எவ்வித தீவிரவாத
இயக்கமும் பொறுப்பு
ஏற்கவில்லை.
முன்னதாக
இதே போன்ற
தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாத
இக்கம் நடத்திய
நிலையில் பெப்ரவரி
மாதம் புதிய
அரசின் குடியரசு
தலைவர் பதவி
விலக வேண்டும்
என்ற கோரிக்கையுடன்
அரசுக்கு இவர்கள்
மிரட்டல் விடுத்ததும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment