சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்
கொடுத்த உறுதி மொழி நிறைவேறுமா?
மாகாணசபையின் இறுதி அமர்வு நாளை
எதிர்வரும்
30ஆம் திகதியுடன்
ஆயுட்காலம் முடிவடையும் கிழக்கு மாகாணசபையின் இறுதி
அமர்வு நாளை
திங்கட் கிழமை
நடைபெறவுள்ள நிலையில். சாய்ந்தமருது வைத்தியசாலையை
தரமுயர்த்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் சாய்ந்தமருது ஷூரா
கவுன்ஸில் பிரதிநிதிகளுக்கு கொடுத்த உறுதி மொழி நிறைவேறுமா?
மாகாண சபை கலைவதற்கு முன்னர்
சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்;
ஷூரா கவுன்ஸிலிடம் அமைச்சர் உறுதி
கிழக்கு மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்குநடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உறுதியளித்துள்ளார்.
சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகளுடன் தனது அட்டாளைச்சேனை பணிமனையில் இடம்பெற்றசந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
ஷூரா கவுன்ஸில் குழுவினர் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பிலானகோரிக்கையை முன்வைத்து அமைச்சருடன் கலந்துரையாடினர். அத்துடன் குறித்த வைத்தியசாலையில்நிலவி வருகின்ற பல்வேறு குறைபாடுகள் மற்றும் அவசர தேவைகள் பற்றியும் அமைச்சருக்குஎடுத்துக்கூறப்பட்டது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அதுஇன்னும் நிறைவேற்றித்தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் இதனால் இவ்வைத்தியசாலைமிகவும் பின்னடைவான நிலைக்கு வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசாங்க சுற்றறிக்கையை காரணம் காட்டி இதனை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதிலுள்ளநடைமுறைச்சிக்கல்களை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ‘பி’ தரத்தில்இருந்து ‘ஏ’ தரத்திற்கு உயர்த்துமாறு ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதனை ஏற்றுக்கொண்ட மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை கலைவதற்குமுன்னர் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்திருந்தார்.
ஷூரா கவுன்ஸில் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் சாய்ந்தமருது உலமா சபையின்தலைவர் மௌலவி முஹம்மத் சலீம், ஷூரா கவுன்ஸில் பிரதித் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார், செயலாளர்எம்.ஐ.எம்.சாதாத், பிரதிச் செயலாளர் எம்.சி.எம்.சி.முனீர், பிரதிப் பொருளாளர் எம்.ஐ.எம்.இஸ்திகார், முன்னாள் செயலாளர் எஸ்.எம்.கலீல் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்ஏ.எல்.எம்.நசீர் கொடுத்த உறுதி மொழி நிறைவேறுமா?மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை 25 ஆம் திகதி திங்கள்கிழமை இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment