குற்றவாளியின் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பொலிஸ்!

 நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம்

Caring policewoman breastfeeds suspect's hungry baby outside courtroom 

சீனாவில் குற்றவாளியின் குழந்தைக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சீனாவின் ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் 4 மாத குழந்தையின் தாயும் ஒருவர், வழக்கு நடந்த சமயம் குழந்தையை பெண் பொலிஸான ஹாவோ லினாவின் பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளார்.
அப்போது குழந்தை வீறிட்டு அழத்தொடங்கியது, எவ்வளவோ சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.
உடனடியாக ஹாவோ லினா குழந்தைக்கு பால் கொடுக்கத் தொடங்கினார்.
இந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலானது, பலரும் அவரின் மனிதாபிமானத்தை பாராட்டி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் கடமையை காட்டிலும் மனித நேயத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார் ஹாவோ லினா.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top