ஆங் சான் சூ கீ புகைப்படத்தை அகற்றியது
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
ரோஹிங்கியா
விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக
கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான்
சூ கியின்
படம் அகற்றப்பட்டது.
மியான்மரின்
அரசு ஆலோசகர்
ஆங் சான்
சூ கி.
இவர் 1967-ல்
லண்டனில் உள்ள
செயின்ட் ஹூக்ஸ்
கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். ஒக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்திற்குட்பட்ட இந்த கல்லூரியில்
தத்துவம், அரசியல்
மற்றும் பொருளாதாரம்
படித்தார். இதை தொடர்ந்து கடந்த 1999 முதல்
அந்த கல்லூரியில்
அவரது புகைப்படம்
இடம்பிடித்தது.
நோபல்
பரிசு பெற்ற
இவரை கடந்த
2012-ம் ஆண்டில்
செயின்ட் ஹூக்ஸ்
கல்லூரி தனது
கல்லூரிக்கு அழைத்து கெளரவித்தது.
இந்நிலையில்,
இந்த கல்லூலியின்
நுழைவு வாயிலில்
இடம் பிடித்திருந்த
ஆங் சான்
சூ கியின்
படத்தை பல்கலைக்கழக
நிர்வாகம் அகற்றியுள்ளது.
இதுகுறித்து
கல்லூரி நிர்வாகத்தினர்
கூறுகையில், கண்காட்சியில் வைப்பதற்காக இந்த மாத
தொடக்கத்தில் புதிய ஓவியங்கள் கிடைத்துள்ளன. எனவே,
ஆங் சான்
சூ கியின்
படம் அகற்றப்பட்டு
பாதுகாப்பாக வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளனர்.
ஆனால்,
மியான்மர் நாட்டில்
அவதிப்பட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில்
சூ கி
எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.
ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது என
அங்குள்ள செய்தி
நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.